‘எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை’ – ராமர் பாடலை பாடியதற்கு விளக்கம் அளித்த நடிகர் சுகன்யா..!

0
138

உத்திரப் பிரதேச மாநில அயோத்தில் புதிதாக ராமர் கோவில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடிகை சுகன்யா ‘ஜெய் ஸ்ரீராம்’ எனும் பாடலை எழுதி பாடியிருந்தார்.

இந்த பாடலுக்கு அவரே இசையயும் அமைத்திருந்தார். இது குறித்து, ‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள வேளையில் என்னுடைய சிறு பங்களிப்பாக இந்தப் பாடலை உருவாக்கி உள்ளேன், என கூறினார்.

இதன் காரணமாக நடிகை சுகன்யா அரசியலில் களமிறங்கப் போவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து சுகன்யா கூறுகையில், “எனக்கு சிறு வயதில் இருந்தே கடவுள் நம்பிக்கை உண்டு. கடவுளுக்கு பூஜை செய்த பின்னர் தான் இன்றும் சினிமா படப்பிடிப்பு தொடங்குகிறது.

500 வருடங்களுக்குப் பிறகு ராமர் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இதை உலகமே கொண்டாடி வருகிறது. இதை நாம் கொண்டாடவில்லை என்றால்தான் தவறு. அதற்காகத்தான் நான் இந்த பட்டை பாடினேன். மற்றபடி எனக்கும், அரசியலுக்கும் சம்பந்தமில்லை” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here