‘கூட்டணி குறித்து ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும்’ – சரத்குமார்..!

0
118

‘All India Samathuva Makkal Katchi’: நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் பல்வேறு கட்சித் தலைவர்களும் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி தேர்தலுக்குத் தயராகி வருகின்றனர்.

அந்த வகையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும் என கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, “எங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்வோம்” என இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் மன்சூர் அலிகான் நேற்று பேசிய நிலையில் தற்போது சரத்குமாரும் கூட்டணி குறித்து அறிவிப்புகள் வரும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here