ரூ.23 கோடி சொத்துகளை பூனைகளுக்கு எழுதி வைத்த மூதாட்டி..!

0
105

சீனாவில் உள்ள ஷாங்காய் நகரைச் சேர்ந்த மூதாட்டி லியூ. இவர் தனக்குச் சொந்தமான 23 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை தனது மூன்று பிள்ளைகளுக்கும் பிரித்துக் கொடுக்கும் வகையில் உயில் எழுதி வைத்திருக்கிறார்.

இந்த நிலையில், மூதாட்டி லியூவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், தனிமையில் அவதிபட்டு வந்த மூதாட்டியை அவரது மூன்று பிள்ளைகளும் ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை என தெரிகிறது.

இது மூதாட்டி லியூவிற்கு பேரதிர்ச்சியாகவும், ஒரு புறம் வேதனையாகவும் இருந்திருக்கிறது. இதனால், ஆவேசமடைந்த அவர் தனது உயிலை மாற்றி எழுதி வைக்க முடிவு செய்திருக்கிறார். அதன் பேரில் தன்னுடன் எப்பொழுதும் இருக்கும் தான் வளர்க்கும் நாய்கள் மற்றும் பூனைகள் மீது எழுதி வைத்திருக்கிறார்.

இதனை அறிந்த லியூவின் பிள்ளைகள் மூவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த விஷயம் கேட்பதற்கு சுவாரசியாமக இருந்தாலும் இதுபோன்ற செயல்களுக்கு எந்த நாட்டிலும் சட்டம் இல்லை என்பதால் அவர் விலங்குகள் நல அமைப்பிற்குத் தொடர்பு கொண்டுள்ளார்.

பின்னர், இந்த சொத்தை வைத்து புதிதாக கால்நடை மருத்துவமனையை தொடங்கி. நாய், பூனையை நன்றாக பராமரிக்கும்படி, விலங்குகள் நல அமைப்பிடம் கூறியிருக்கிறார். இது குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here