‘திமுக இளைஞரணி மாநாடு ஒரு நமத்துப்போன மிக்சர்’ – அண்ணாமலை விமர்சனம்!

0
147

சேலம் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த திமுக இளைஞரணி மாநாடு ஒரு நமத்துப்போன மிக்சர் போன்றது அதனை யாரும் சாப்பிட முடியாது என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் இன்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சமீபத்தில் நடந்து முடிந்த திமுக இளைஞரணி மாநாடு நமத்துப்போன மிக்சர், அதை யாரும் சாப்பிட முடியாது.

தமிழ்நாட்டை திராவிட முன்னேற்றக் கழகத்திடமிருந்து மீட்பதே பாஜக கொள்கையாக இருக்கிறது. ஒற்றை குடும்பம் ஆட்சியில் இருக்கக்கூடாது என்பது தான் எங்களின் நோக்கம். வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளை இன்னும் கைது செய்யப்படவில்லை.

சமூக நீதி குறித்துப் பேச திமுகவிற்கு தகுதியில்லை. இந்தியாவை பொறுத்தவரை ஒற்றைக் கட்சியான பாஜகதான் இனி ஆட்சியில் இருக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here