சர்ச்சையை ஏற்படுத்திய ‘வணங்கான்’ போஸ்டர் – விளக்கமளித்த அருண் விஜய்!

0
95

நடிகர் அருண் விஜய் இயக்குநர் பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரோஷினி பிரகாஷ் , சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர். முதலில் இந்த படத்தில் நடிகர் சூர்யா நடிப்பதாக இருந்தத நிலையில் பல்வேறு காரணங்களால் அவர் இந்த படத்தில் இருந்து விலகினார்.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த போஸ்டரில் அருண் விஜய் ஒரு கையில் பெரியார் சிலை மற்றும் மற்றொரு கையில் விநாயகர் சிலையை வைத்திருந்தார்.

இந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த போஸ்டர் குறித்து நடிகர் அருண் விஜய் விளக்கமளித்துள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘ஒரு விஷயத்தை மனம் விரும்பி செய்யும்போது கஷ்டம் தெரியாது.

பாலா படத்தில் நடிக்க மாட்டோமா என ஏங்கியுள்ளேன். ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு வரும்போது சிறப்பாக கொடுக்கவேண்டும் என்று உறுதியாக இருக்கிறேன். அவரது எதிர்பார்ப்பு எனக்கு தெரியும்.

எனவே ஆரம்பத்திலேயே நாங்கள் ‘செட்’ ஆகிவிட்டோம். இருவரும் ஒரே ரேசில் ஓடும் குதிரைகளாகி விட்டோம். இந்தப் படம் எனது திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

போஸ்டரில் இடம்பெற்ற அந்த சிலைகள் முழுக்க முழுக்க பாலாவின் சிந்தனை. படம் பார்க்கும்போது அது ஏன்? என்பது அனைவருக்கும் தெரியும்’ என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here