‘தமிழ் கலாச்சாரத்தை அழிக்கும் திமுக’: அண்ணாமலை குற்றச்சாட்டு!

0
98

தமிழ் கலாச்சாரத்தை அழிக்க திமுக முயற்சி செய்கிறது என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநிலப் பாடலாக 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திமுக அரசு அறிவித்தது. அதோடு, பாடலை 55 வினாடிகளில், முல்லைப்பாணி ராகத்தில் பாட வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.

ஆனால் நேற்றைய தினம், ‘கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள்’ தொடக்க விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சுமார் 90 வினாடிகள் மட்டுமே பாடப்பட்டது. அது மட்டுமல்லாமல், மேற்கத்திய இசை வடிவில் பாடியது வன்மையான கண்டனத்துக்குரியது.

விளம்பர அரசியலுக்காக அறிவிப்புகள் வெளியிட்டு விட்டு, பின்னர் அவற்றைப் பின்பற்ற முடியாமல் தாங்களே அவற்றை மீறுவது திமுகவின் வழக்கமாக வைத்திருக்கிறது.

பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில், மேற்கத்திய இசை வடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது, தமிழ் கலாச்சாரத்தை அழிக்க திமுக செய்யும் முயற்சியாகவே கருதப்படும்” என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here