பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..! பதறியடித்து ஓடிய மாணவர்கள்..!

0
92

சென்னை அண்ணாநகர், ஜே.ஜே. நகரில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலமாக வந்த வெடிகுண்டு மிரட்டலைக் கண்ட பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தன.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் 13 பள்ளிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பெற்றோர்களை வரவழைத்து மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகங்களில் மோப்ப நாய் உதவியுடன் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக பெற்றோர்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் என சென்னை மாநகர காவல் துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், வெடிகுண்டு மிரட்டலானது புரளி என்றும் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here