முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அமைச்சரவை கூட்டம்..!

0
104

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் கடந்த ஜனவரி 7 மற்றும் 8ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவை அறையில் இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் பொருள்கள் குறித்த விவரம் தனியாக அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி இன்று (ஜன.23) காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 28ஆம் தேதி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here