தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு..! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?..

0
139

Rain: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதன் காரணமாக இன்று (ஏப்ரல் 28) முதல் மே 04ஆம் தேதி வரை மேற்குத் தொடர்ச்சி மலை உள்ள மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமர், வட தமிழகத்தில் உள்ள உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், தமிழ்நாட்டில் உள்ள ஏனைய மாவட்டங்கள், புதுச்சேர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த சில மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, கன்னியாகுமர், திருநெல்வேலி, விருதுநகர், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here