‘அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்’ – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

0
57

சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைவிதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில், ‘கட்சியில் இருந்து நீக்கப்பட்டும் அதே பதவியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி வருகிறார்’ என வாதிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு உள்ளிட்டவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு குறித்த விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது.

தொடர்ந்து, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் அதிமுக சின்னைக் கொடி, பெயர் உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் ஓபிஎஸ் தரப்பினர் தனி நீதிபதி முன், உரிய மனு தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here