தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

0
78

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு நேற்று அடையாளம் தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்டனர்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு நேற்று அடையாளம் தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.

ஊடக செய்தியாளர் மீதான இந்த தாக்குதல் மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சம்பவம் நடப்பதற்கு முன்பாக செய்தியாளர் நேச பிரபு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரியதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்க ஆணையிடுகிறேன்.

மேலும், மருத்துவ சிகிச்சையில் உள்ள நேச பிரபுவுக்கு, பத்திரிகையாளர் நல வாரியத்திலிருந்து ரூ.3 லட்சம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here