மதுரை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் அருகே பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
அதன்படி அலங்காநல்லூர் அருகேவுள்ள கீழக்கரை கிராமத்தில், வகுத்துமலை அடிவாரத்தில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு மைதான கட்டப்பட்டுள்ளது.
இந்த அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜன.24) திறந்து வைக்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த அரங்கத்தில் திறப்பு விழாவன்று ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கோலாகலமாக நடைபெற இருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் காளைகளை ஆன்லைலின் முன்பதிவு செய்ய வேண்டும் நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஜன.19ஆம் தேதி மதியம் தொடங்கி ஜன.20 மதியம் வரை நடந்த முன்பதிவில் சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.