‘Christmas Celebration’: சென்னையில் 8 ஆயிரம் காவல்துறை பாதுகாப்பு!

0
133

‘Christmas Celebration’ – சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு 8ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

சென்னை: உலகம் முழுவதும் வரும் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் சுமார் 8 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறுகையில், “துணை ஆணையர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையர்கள் தலைமையில் 8 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். இதில், காவல் துறையினருக்கு உதவியாக ஊர்காவல் படையினரும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

நாளை இரவு முதல் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை நாள் வரை 350 தேவாலயங்களுக்கு சுழற்சிமுறையில் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், காவல் துறையினர் சாதாரண உடையில் கண்காணிக்கவுள்ளனர்.

திருட்டு, ஈவ்டீசிங் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். முக்கியமான தேவாலயங்களில் கூடுதல் காவல் துறையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவுள்ளோம். கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் தொடர் கண்காணிப்பில் காவல் துறையினர் ஈடுபடுவார்கள்” என்றார்.

இதையும் படிங்க: Merry Christmas Trailer: வெளியானது விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’ டிரைலர்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here