‘ராமர் கோவிலை திறந்து பாஜக திசைத்திருப்ப பார்க்கிறது’ – முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்..

0
113

சென்னை தேனாம்பேட்டையில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “தற்போது திமுக பொருளாளராக உள்ள டி.ஆர்.பாலு, ஒரே கொடி, ஒரே கட்சி என்ற கொள்கையை கடைபிடித்து வருபவர். கருணாநிதியின் பேச்சைக்கேட்டு அரசியலுக்கு வந்தவர்.

இது பாலுவின் வரலாற்று புத்தகம் மட்டுமல்ல, மற்றவர்களுக்கு வழிகாட்டும் புத்தகமாகும். பாஜகவை வீழ்த்தக்கூடிய இந்தியா கூட்டணியின் உருவாக்கத்தில் டி.ஆர்.பாலுவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

வருகிற நாடாளுமன்ற தேர்தல், யார் ஆட்சியில் அமரக்கூடாது என்பதற்காக நடைபெறவுள்ள தேர்தல். கடந்த 10 ஆண்டு காலமாக மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

பேரிடர் நிவாரண நிதி ஒதுக்காமல் இறுதி காலத்தில் ஒரு கோவிலை கட்டி பாஜக தலைமை மக்களை திசை திருப்ப பார்க்கிறது. தேர்தலை சந்திக்கும் பாஜகவுக்கு தங்கள் சாதனைகளை மக்களிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

அதனால் முழுவதுமாக கட்டி முடிக்காத கோவிலை அவசரமாக திறந்து, சாதித்துவிட்டதாக வெளியில் காட்டுகின்றனர். இதுபோன்ற திசைதிருப்பும் தந்திரங்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here