கருணாநிதி நினைவிடத்தை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்..!

0
128

தமிழ்நாட்டின் முதலமைச்சராக 18 ஆண்டுகள் பதவி வகித்தவர் மறைந்த கலைஞர் கருணாநிதி. தனது 80 ஆண்டு காலத்தை அரசியலுக்காவே அர்ப்பணித்தவர் கலைஞர். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு 7ஆம் தேதி தனது 95 வயதில் கருணாநிதி உயிரிழந்தார்.

திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அவரது மகன் மு.க.ஸ்டாலின் தலைவரானார். தொடர்ந்து, கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கட்டாயம் நினைவிடம் அமைக்கப்படும் என ஸ்டாலின் அறிவித்தார்.

பின்னர் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில் சட்டசபை விதி எண் 110ன் கீழ் மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

தமிழ்நாடு அரசு சார்பில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் இந்த நவீன விளக்கப்படங்களுடன் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கருணாநிதி நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.26) திறந்து வைக்கிறார்.

முன்னதாக புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிட கல்வெட்டு மற்றும் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை திறந்து வைத்தார்.

பின்னர், தனது தந்தை கருணாநிதி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்தை பொதுமக்கள் பார்வைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த திறப்பு விழாவில், அமைச்சர் துரைமுருகன், திமுக கட்சி நிர்வாகிகள், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தை பார்வையிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here