‘நமக்கெல்லாம் அண்ணனாக அறிவு மன்னனாக வழிகாட்டியவர் பேரறிஞர்’ – முதலமைச்சர் ஸ்டாலின்..!

0
115

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுக நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 55ஆவது நினைவு தினம் இன்று (பிப்.3) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஸ்பெயினில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணாவின் நினைவுதினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, அண்ணாவின் நினைவுதினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவுநாள்.

இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கழக உடன்பிறப்புகள், பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும். எண்ணித் துணிக கருமம்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here