நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திருநெல்வேலியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அங்கு பேசிய ஸ்டாலின், “பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அமைதியான இந்தியா, அமளியான இந்தியாவாக மாறிவிடும். தென் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பிரதமர் நிதி வழக்கவில்லை.
தொடர்ந்து, இரண்டு பேரிடர்கள் வந்தபோதும் தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட பிரதமர் மோடி வழங்கவில்லை. தமிழ்நாட்டை வெறுக்காத, தமிழர்களை விரும்பக்கூடியவரே பிரதமராக வரவேண்டும்.
பாஜகவுக்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம் என்பதை மக்கள் அறிய வேண்டும். பாஜகவுக்கு வாக்களிப்பது ஒரு அவமானம் என வாக்காளர்கள் அறிய வேண்டும்” என பேசினார்.