தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்க தடை..! அரசு அதிரடி உத்தரவு..!

0
107

புதுச்சேரி மாநிலத்தில் விற்கப்பட்ட பஞ்சுமிட்டாயில் உடலுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் Rhodomine B எனும் ரசாயனம் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் விற்கப்படும் பஞ்சுமிட்டாய்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அதன்படி அந்த சோதனையின் முடிவு இன்று வெளியானது. அதில், பஞ்சுமிட்டாயில் Rhodomine B எனும் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் இருந்தது தெரியவந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதிகமாக இந்த பஞ்சுமிட்டாய்களை குழந்தைகள் வாங்கு சாப்பிடுவதால் அவர்களுக்கு சிறு வயதிலேயே நோய் உண்டாக வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் இனிமேல் பஞ்சுமிட்டாய்கள் விற்பனை செய்யக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுகாதரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியனின் இந்த அதிரடி உத்தரவின் பேரில் தமிழ்நாட்டில் விற்கப்படும் பஞ்சுமிட்டாய்களை அதிகார்கள் பறிமுதல் செய்து வருகின்றனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here