‘இவங்களுக்கு இதே வேலை தான்’ – தயாரிப்பாளரால் கடுப்பான வெங்கட்பிரபு..

0
82

Venkat Prabhu: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ‘The Greatest of all Time’. இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.

தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தீவிரமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கேரளாவில் ஷூட்டிங் சிறப்பாக நடந்து முடிந்தது.

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் துபாய் சென்றதாக கூறப்பட்டது. மேலும், இதற்கான புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதற்கு மும்பாக விஜய் சாய்பாபா கோவிலுக்குச் சென்றுள்ளார்.

அது குறித்து புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதுஒருபுறம் இருக்க மறுபக்கம் இயக்குநர் வெங்கட்பிரபுவை அர்ச்சனா கல்பாத்தி மற்றும் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோர் கட்டையால் தாக்கும் புகைப்படம் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.

இதனை வெங்கட்பிரபு தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். மேலும், அதில் “இப்படத்தான் எனது தயாரிப்பாளர்களுடன் எனது நாள் தொடங்குகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில், நடுவில் நிற்கும் வெங்கட்பிரபுவை சகோதரிகள் ஜாலியாக தாக்குவது போல் அமைந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து, படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதனை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here