கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல்..! தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு..

0
170

கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலக வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, அவரது நினைவிடத்திற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் தினமும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், வருகிற ஜனவரி 24ஆம் தேதி மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் படத்திறப்பு விழா நடைபெறவுள்ளதாக, தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், “முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், தேசிய புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வருகிற ஜனவரி 24ஆம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here