விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தை பார்த்த தேமுதிக நிர்வாகி மாரடைப்பால் உயிரிழப்பு!

0
78

விழுப்புரம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 28ஆம் தேதி உயிரிழந்த நிலையில் அவரது இறுதி ஊர்வலத்தை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த தேமுதிக கிளைச் செயலாளர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேமுதிக தலைவரும். நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த 28ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் நேற்று முன்தினம் (டிச.29) அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த்தின் இறுதி அஞ்சலிக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சென்றனர்.

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தேமுதிக கிளைச் செயலாளர் விஜயகுமார் (41) என்பவர் சென்னைக்குச் சென்று, விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு சொந்த ஊருக்குச் சென்றார். தொடர்ந்து, நேற்று முன்தினம் நடைபெற்ற விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தை, விஜயகுமார் தனது வீட்டில் இருந்து, தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறார். அழுதுகொண்டிருந்த விஜயகுமார் திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக விஜயகுமாரை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு விஜயகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் எற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விஜயகுமாரின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், தனது தலைவர் விஜயகாந்தின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்த விஜயகுமார், மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ‘ஊமை விழிகள் பார்ட் 2’ – AI மூலம் உயிர் பெறும் விஜயகாந்த்..! ரசிகர்கள் உற்சாகம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here