‘DMK Files’: அண்ணாமலை குறித்த கேள்விக்கு பதிலடி கொடுத்த துரைமுருகன்..

0
53

வேலூர்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தி.மு.க ஃபைல்ஸ் என்ற பெயரில் தி.மு.க முக்கிய தலைவர்கள் ஊழல் செய்ததாகக் கூறி சில தகவல்களை வெளியிட்டார். ஏற்கனவே 2 திமுக ஃபைல்ஸ்கள் வெளியானது.

இந்த நிலையில், தற்போது 3 ஆவது திமுக ஃபைல்ஸை வெளியிடுவேன் என அண்ணாமலை கூறியுள்ளார். இந்த நிலையில், வேலூரில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், “வெளியிடட்டும், வேணாமென யார் கையப் புடிச்சு வச்சுருக்கா, வெளியிடட்டும்” என சிரித்தபடி பதில் கூறினார்.

தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தல் குறித்த கேள்விக்கு, “எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க தயாராக உள்ளது. கூட்டணி கட்சிகளோடு இணைந்து தி.மு.க தேர்தலைச் சந்திக்கும்” எனக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here