நாம் தமிழர் கட்சி ஒன்றிய தலைவர் கொலை வழக்கு: திமுக பிரமுகரை கட்சியில் இருந்து நீக்கிய துரைமுருகன்!

0
106

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே உள்ள மைலோடு மடத்துவிளை பகுதியில் வசித்து வரும் சேவியர் குமார்(42). இவர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பணியாற்றி வந்தார். நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும் இருந்து வந்தார்.

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சேவியர் குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய திமுக பிரமுகர் அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தக்கலை தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார்.

திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, சேவியர் குமார் கொலை வழக்கு தொடர்பாக திமுக பிரமுகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here