‘நேதாஜியின் வீரத்தையும், புகழையும் போற்றி வணங்குகிறேன்’ – எடப்பாடி பழனிசாமி..

0
120

நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக துளியளவும் அச்சமின்றி போராடியவர் நேதாஜி என அவரது பிறந்தநாளை யொட்டி எடப்பாடி பழனிசாமி புகழாரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ‘X’ தளத்தில் கூறியிருப்பதாவது, “ஆங்கிலேய ஆட்சியை பெரும் சினம் கொண்டு எதிர்த்து, நாட்டின் விடுதலைக்காக தன்னலமற்ற தியாக வீரர்களை ஒன்று திரட்டி மாபெரும் இந்திய ராணுவத்தைக் கட்டமைத்தார்.

இந்திய மண்ணில் சுதந்திரத்திற்காக வீர முழக்கமிட்டு, ஆங்கிலேயர்களுக்கு எதிராக துளியளவும் அச்சமின்றி போராடிய பெரும் ஆளுமைமிக்க தேசத் தலைவர் நேதாஜி அவர்களின் பிறந்தநாளில் அவரின் வீரத்தையும், புகழையும் போற்றி வணங்குகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here