பொங்கல் பண்டிகை விடுமுறை: நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

0
102

சென்னை: தமிழர் திருநாளான தை பொங்கல் நாள் வருகிற 15ஆம் தேதி உலக தமிழ் மக்களால் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாளை (ஜன.12) முதல் 14ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட பிற ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 4ஆயிரத்து706 சிறப்பு பேருந்துகளும், பிற இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு 8ஆயிரத்து 478 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட இருக்கின்றன.

சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லக் கூடிய பேருந்துகள் நிற்கக்கூடிய முக்கிய பேருந்து நிலையமான கோயம்பேடு, தாம்பரம், மாதவரம் உள்ளிட்ட அறு இடங்களில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, கரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகப் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கங்கள் குறித்து அறிய மற்றும் ஏதேனும் புகார் தெரிவிக்க 9445014450, 9445014436 ஆகிய செல்போன் எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் பண்டிகை விடுமுறைக்குப் பிறகும் ஜனவரி 16, 17, 18 ஆகிய தினங்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here