நாகைக்கு விசிட் அடித்த ஆளுநர் ரவி.. பலத்த போலீஸ் பாதுகாப்பு..

0
80

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு இல்லத்திற்கு ஆளுநர் ரவி சென்றார். கீழ்வெண்மணியில் கடந்த 1968ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் குண்டடிபட்டு உயிர் பிழைத்த தியாகி பழனிவேலைச் சந்தித்துப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆர்.என்.ரவி சென்று மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து வழிபாடு செய்தார். அதன் பின்னர், நாகை நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்குச் சென்று மீனவர்களைச் சந்தித்துப் பேசினார்.

ஆளுநர் ரவியின் வருகையையொட்டி நாகப்பட்டினம் மாவட்ட காவல் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here