ராமர் கோவில் திறப்பு விழா: ‘ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடுகிறது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி!

0
101

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழக மக்கள் தங்களில் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகையின் ‘X’ தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “தற்போது நாட்டு மக்கள் ராம பக்தியில் மூழ்கியுள்ளனர். தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகள் மத்தியிலும் இதை நான் பார்க்கிறேன், உணர்கிறேன்.

ஸ்ரீ ராமர் பாரதத்தின் தேசிய சின்னம். இன்று (ஜன 22) அயோத்தியில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவின் மூலம் தேசத்திற்கு ஒரு அற்புதமான ராமர் கோவில் கிடைக்கப் பெறும். இந்த வரலாற்று தினத்தை ஒவ்வொரு வீட்டின் முன்பும் தீபம் ஏற்றி ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடும்.

இந்த நாளை தமிழ்நாட்டின் அனைத்து சகோதர, சகோதரிகளும் தங்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகள் முன் தீபம் ஏற்றி கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here