‘நேதாஜி இல்லை என்றால் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடையாது’ – ஆளுநர் ரவி..!

0
149

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மட்டும் இல்லையென்றால் இந்தியா 1947ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்திருக்காது என ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (ஜன.,23) நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்திநராக கலந்துகொண்டார். தொடர்ந்து, சுபாஷ் சந்திர போஸின் உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய ஆளுநர் ரவி, “1942ஆம் ஆண்டுக்குப் பின் மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் பலனளிக்கவில்லை. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மட்டும் இல்லை என்றால் இந்தியா 1947ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றிருக்காது.

நேதாஜியின் இந்திய தேசிய படை ஆங்கிலேய ராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது. நேதாஜியே நமது நாட்டின் தேசத்தந்தை. வேலு நாச்சியார், வ.உ.சி. போன்றவர்களைப் போல நேதாஜியின் தியாகமும் போற்றப்பட வேண்டும்.

இந்திய தேசிய காங்கிரசின் போராட்டத்தால் வெளியேறவில்லை என பிரிட்டன் பிரதமர் அட்லி கூறியிருந்தார். இஸ்லாமிய தலைவர்களின் எண்ணப்படி 1947ஆம் ஆண்டு நாடு இரண்டாக பிரிந்தது” என பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here