‘பிரதமரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்’ – இளையராஜா புகழாரம்..!

0
126

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த நிலையில், சென்னையில் நாரத கான சபாநிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “ராமர் பிறந்த ஊரில் அவருக்கான கோவிலை பிரதமர் கட்டியுள்ளார். பிரதமரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

அந்த காலத்தில் கோவில்களை மன்னர்கள் கட்டி வந்த நிலையில் தற்போது ஒரு பிரதமர் கோவில் கட்டியுள்ளார். முன்பு இருந்த பிரதமர்கள் இதுபோன்று ஒருபோதும் செய்ததில்லை. அயோத்தி ராமர் கோவில் இந்திய முழுவதற்குமான கோவில்” எனப் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here