kalaignar 100: Short film, Reels எடுப்பவரா நீங்கள்.. அரிய வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க..

0
72

kalaignar 100 years: முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் வகையில் “தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர்” எனும் குழுவின் சார்பில் குறும்பட போட்டி (Short film Competition ) மற்றும் சுருள்பட போட்டி (Reels Competition) அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர் எனும் குழு, நூற்றாண்டு விழா நாயகன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரது பரிமாணங்களை போற்றும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது.

அந்த வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர் எனும் குழுவின் சார்பில் குறும்பட போட்டி (Short film Competition) மற்றும் சுருள்படபோட்டி (Reels Competition) நடத்துவது தொடர்பான செய்தி வெளியீடு இன்று வெளியிடப்பட்டது.

அந்த செய்தி வெளியீட்டில் இப்போட்டிகளுக்கான விண்ணப்பங்களுடன் கூடிய குறும்படங்கள் மற்றும் சுருள் படங்களை 20.12.2023-க்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டது. 31.10.2023 நிர்வாக காரணங்களால் இப்போட்டிகளுக்கான கடைசி தேதி 15.01.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

குறும்பட போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர் (உதாரணமாக சமூக நீதி, கல்வியில் புரட்சி, சுகாதார துறையில் புரட்சி, தொழிற்துறை மேம்பாடு, மாநில அரசின் உரிமை, பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற/ நகர்ப்புற வளர்ச்சி) என்ற தலைப்பில் புதிய குறும்படங்களை (Short film) எடுக்க வேண்டும். அப்படம் அதிகபட்சம் 10 நிமிடங்கள் உருவாக்கி அதனை விண்ணப்பங்களுடன் 15.01.2024 தேதிக்குள் (shortfilmkalaignar100@gmail.com) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதேபோல் சுருள்பட போட்டியில் (Reels) கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர் எனும் தலைப்பில் புதிய சுருள் படங்களை 30 வினாடிகள் முதல் 1 நிமிடம் வரை இருக்கும் வகையில் உருவாக்கி விண்ணப்பங்களுடன் தேதிக்குள் (reelskalaignar100@gmail.com) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

15.01.2024 குறும்பட போட்டி (Short film Competition) மற்றும் சுருள்பட போட்டிகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் https://dipr.tn.gov.in (செய்தி வெளியீடு (Press release) எண்.2179, நாள்:31.10.2023) என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here