கமல் தலைமையில் இன்று மநீம அவசர செயற்குழு கூட்டம்!

0
115

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் பணிக்குழு, தொகுதி பொறுப்பாளர்கள் என பல்வேறு நிலைகளை உருவாக்கி பணியாற்றி வருகின்றன. இந்த நிலையில்,

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில், அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில், இந்தியா கூட்டணியுடன், தேர்தல் கூட்டணி அமைப்பதா அல்லது தனித்து களம் காண்பதா என்பது குறித்து முக்கிய நிர்வாகிகளிடம் கருத்து கேட்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுக்களும், தேர்தல் பணிக்கான குழுக்கள் அமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here