‘அடுத்த படத்தின் அப்டேட் விரைவில்’ – லெஜண்ட் சரவணன் ட்வீட்..!

0
92

லெஜெண்ட் சரவணன் தயாரித்து நடித்த ‘லெஜெண்ட்’ திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கி இருந்தனர். நடிகை ஊர்வசி ரவுட்டேலா, நடிகர் விவேக், நடிகர் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

மேலும், இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். இந்த நிலையில், லெஜெண்ட் சரவணன் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அவர் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அடுத்த படத்தின் பணி தொடங்கிவிட்டது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here