புதிய ஜல்லிக்கட்டு மைதானம்.. பங்கேற்பாளர்களுக்கான முன்பதிவு நிறுத்தம்..

0
89

அலங்காநல்லூர் அருகே பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

உலக புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகேவுள்ள கீழக்கரை கிராமத்தில், வகுத்துமலை அடிவாரத்தில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு அரங்கத்தை வரும் ஜனவரி 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த அரங்கத்தில் திறப்பு விழாவன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெறவுள்ளன.

இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள், காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு செய்யும் பணிகள் நேற்று தொடங்கியிருந்தது. இந்த நிலையில் நேற்று தொடங்கிய ஆன்லைன் முன்பதிவு இன்று நிறைவு பெற்றுள்ளது.

முன்பதிவு செய்த வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here