மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு: 9ஆயிரம் காளைகள், 3300 வீரர்கள் பதிவு!

0
82

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் ரூ.45 கோடியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜன.24ஆம் தேதி திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து அங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் காளைகளை ஆன்லைலின் முன்பதிவு செய்ய வேண்டும் நிர்வாகம் உத்தரவிட்ட நிலையில்

ஜன.19ஆம் தேதி மதியம் தொடங்கி ஜன.20 மதியம் வரை நடந்த இந்த முன்பதிவில் சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக ஜனவரி 24ஆம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு போட்டிகள் நடத்தப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்த நிலையில் தற்போது மைதானம் திறக்கப்படவுள்ள தினத்தில் மட்டும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ளது.

இருந்தபோதிலும், ஜல்லிக்கட்டுப் போட்டியை தொடர்ந்து 5 நாட்களாக நடத்தாமல், வாரம் ஒருமுறை சனி, ஞாயிறுகளில் நடத்தலாமா என்ற ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here