‘சினிமா தெரியாமலேயே நிறைய பேர் பேசுகிறார்கள்’ – மீசை ராஜேந்திரன் ஆவேசம்..!

0
116

இயக்குநர் சாய் பிரபா மீனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்’. இந்த படத்தில் சாய் பிரபா மீனா, ராஜ் மித்ரன், மீசை ராஜேந்திரன், சங்கீதா, கீர்த்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகை ஷகீலா நடித்துள்ளார்.

இப்படத்தை சாய் ராம் ஏவிஆர் பிலிம்ஸ் புரொடக்ஷன் மற்றும் எஸ்.பி.எம். பிக்சர்ஸ் சாய் சரண் ஆகியோர் இணைந்து வழங்கும் நிலையில் சந்தோஷ் ராம் இசையமைக்க பால்பாண்டி ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தொகுப்பை நவீன் குமார் மேற்கொண்டுள்ளார். பெண் பாதுகாப்பை மையப்படுத்தி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் மீசை ராஜேந்திரன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “என்னை சினிமாவிலும் அரசியலிலும் அறிமுகப்படுத்திய விஜயகாந்திற்கு எனது வணக்கம்.

கேப்டன் இதுவரை 53 இயக்குநர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அதே போல் இயங்கி வரும் ஜெய் ஆகாஷுக்கு என் வாழ்த்துக்கள். என் வெற்றிக்கு என் வாழ்வுக்கு காரணம் சினிமா தான். சினிமா பலரை வாழவைக்கிறது.

சினிமா பற்றி எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியும். சினிமா தெரியாமலே இன்று நிறைய பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சினிமா ஒரு மிக பவர்ஃபுல்லானது. அதில் சாதிப்பது அத்தனை எளிதானதல்ல.

சாய் பிரபாவின் இரண்டு படத்திலும் நான் நடித்துள்ளேன், மிகப்பெரிய உழைப்பாளி. இந்தப்படத்திற்காக நிறைய கஷ்ங்கள் பட்டிருக்கிறார். இந்த படம் நன்றாக வந்துள்ளது. படம் வெற்றி பெற வாழ்த்துகள் நன்றி” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here