‘பிரதமர் வாய்ப்பு கிடைத்தால் அதையும் ஒரு கை பார்ப்போம்’ – அமைச்சர் அன்பில் மகேஷ்

0
102

தி.மு.க. இளைஞரணி 2ஆவது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (ஜன.21) நடைபெற்று வருகிறது. இளைஞர் அணி தொடங்கப்பட்ட பிறகு முதல் மாநாடு கடந்த 2007ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடந்தது.

இந்த நிலையில், தற்போது 2ஆவது மாநாடு சேலத்தில் நடக்கிறது. இந்த மாநாட்டுக்காக சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்தநாயக்கன்பாளையம் அருகில் சுமார் 2 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் பிரமாண்டமாக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் அமைச்சர் அன்பில் மகேஷ், ‘தமிழ்நாட்டின் கல்வி புரட்சி’ என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “இல்லம் தேடி கல்வி திட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். காலை உணவு திட்டம் மிகவும் மகத்தான திட்டம்.

தமிழ்நாட்டில் உள்ள திட்டங்களை பார்த்து மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்போரின் விழுக்காடு உயர்ந்துள்ளது. திமுக ஆட்சி காலங்களில்தான் ஏராளமான கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

கல்விக்கான பல்வேறு உதவிகளை அரசு செய்து வருகிறது. ‘இந்தியா’ கூட்டணியில் பிரதமர் என்ற பார்வை நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்கம் திரும்பியுள்ளது. பிரதமர் வாய்ப்பு கிடைத்தால் தட்டி கழிக்க வேண்டாம்; அதையும் ஒரு கை பார்ப்போம்” எனப் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here