‘ஊழல் இல்லாத விளையாட்டு துறை’ – மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பேச்சு..!

0
141

சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி தொடக்க விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பேசுகையில், “வணக்கம் சென்னை.. விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா ஆகிய செஸ் ஜாம்பவான்கள் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர். விளையாட்டு துறைகளில் இருந்த ஊழல்களை இல்லாமல் மாற்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.

இந்தியாவில் செஸ் போட்டி என்றால் விஸ்வநாதன் ஆனந்த் என இருந்த நிலையை பல வெற்றிகளுக்கு பிறகு அது பிரக்ஞானந்தா என மாறியிருக்கிறது. வரும் 2030ஆம் ஆண்டு இளையோர் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடந்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

கேலோ இந்தியாவில் ஒலிம்பிக், ஆசிய விளையாட்டில் அதிக பதக்கங்களை இந்தியா வென்றது. செஸ் போட்டிகளில் பிரக்ஞானந்தா சர்வதேச அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறார். தூர்தர்ஷன் பிராந்திய ஒளிபரப்பில் டிடி பொதிகை தமிழ்தான் முதல் ஹெச்டி தொலைக்காட்சி” என பேசினார்.

இதையும் படிங்க: கேலோ இந்தியா போட்டி: ‘கனவு நனவாகியுள்ளது’ – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here