திருச்சியில் கருணாநிதி சிலை: காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி!

0
114

திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ சிலையை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ், அப்துல்சமது, மாநகர செயலாளரும், மேயருமான அன்பழகன், துணை மேயர் திவ்யா, கவிஞர் சல்மா, கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன், மற்றும் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டக் கழகம் சார்பில் 100 நாட்களுக்கு 100 நிகழ்ச்சிகளென நாள்தோறும் மக்கள் பயனடையும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

75 நிகழ்ச்சிகள் நிறைவடைந்த நிலையில், 76ஆவது நிகழ்ச்சியாக திருச்சி டோல்கேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவுருவச்சிலையை மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளான இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தோம்.

தி.மு.கழகம், தேர்தல் அரசியலில் ஈடுபட பெரும்பான்மையான கழக உடன்பிறப்புகள் ஆதரவளித்த தீரர் கோட்டமாம் திருச்சியில், கலைஞர் அவர்களுக்கு திருவுருவச்சிலையை திறந்து வைத்ததோடு, 2024 மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40 என மாபெரும் வெற்றியை பெற்றிட அயராத உழைக்க உறுதியேற்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here