‘இலங்கையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் விடுவிக்க வேண்டும்’ – முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்..!

0
111

‘CM M.K.Stalin’: தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி கைது செய்து வரும் நிலையில், தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு இன்று (பிப்.9) கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், ‘இலங்கை அரசின் இந்த கைது நடவடிக்கையால், நல்ல நிலையில் உள்ள, பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்டு, தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர முடியவில்லை.

பல மீனவர்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பைக் கொண்டு, தங்களது வர்த்தகத்திற்கு இன்றியமையாத படகுகளை வாங்குவதற்கும், அவற்றைப் பராமரிப்பதற்கும் முதலீடு செய்துள்ளனர். முறையான இழப்பீடு அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்யாத நிலையில் மீனவர்களையும், அவர்களது குடும்பங்களையும் நிதி நெருக்கடியில் தள்ளியுள்ளது.

எனவே, பறிமுதல் செய்யப்பட்டு நாட்டுமையாக்கப்பட்டுள்ள இந்திய மீன்பிடிப் படகுகளைத் திரும்பப் பெற்றிடவும், படகுகளை உடனடியாக விடுவித்திடவும் சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள இலங்கை அரசை வலியுறுத்திட வேண்டும்’ எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here