‘நடிகர் சங்க கட்டடத்திற்கு கேப்டன் விஜயகாந்த் பெயர் வைக்க வேண்டும்’ – தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் வலியுறுத்தல்!

0
83

சென்னை: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் (டிச.28) காலை காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத்திடலில் நேற்று (டிச.29) வைக்கப்பட்டிருந்தது. அங்கு அவரின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் இருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் கட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இரவு 7 மணியளவில் விஜயகாந்த்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், விஜயகாந்த்தின் நினைவிடத்தில் இன்று முதல் ஜன.1ஆம் தேதி இரவு 9 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நடிகர் சங்க கட்டடத்திற்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் விஜயகாந்த் சிலை வைப்பதற்கு தமிழ்நாடு அரசிடம் கடிதம் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விடைபெற்றார் கேப்டன் விஜயாகாந்த்!.. 72 குண்டுகள் முழங்க கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here