புத்தாண்டு கொண்டாட்டம் 2024: சென்னை ஆவடியில் 4ஆயிரம் போலீசார் குவிப்பு!

0
123

சென்னை: சென்னையில் நடைபெறவுள்ள புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக 4000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் களைகட்டுவது வழக்கம். இந்த ஆண்டும் சென்னையில் புத்தாண்டை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சென்னை மாநகர காவல் துறையினர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளனர்.

கடற்கரை பகுதிகளில் நடைபெறவுள்ள புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சென்னை ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் சுமார் 4ஆயிரம் காவல் துறையினர், பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளனர். இதில் ஆவடி, செங்குன்றம் உள்பட 50 இடங்களில் இன்று இரவு 9 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

இதையும் படிங்க: “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை” திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here