‘கூட்டணி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை’ – மநீம தலைவர் கமல்ஹாசன்!

0
109

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் அவசர நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை நடைபெரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் புதுச்சேரி மாநில செயற்குழு நிர்வாகிகள் கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. கூட்டணி குறித்து, நான் போட்டியிடும் தொகுதி குறித்து விரைவில் தெரிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து செய்தியாளர் ஒருவர் கமல்ஹாசனிடம் கருத்து கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், ‘ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து நான் 30 ஆண்டுகளுக்கு முன்பே கருத்து கூறிவிட்டேன்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here