ரேஷன் கடை பணியாளர்களின் ஊக்கத்தொகை.. வங்கிக் கணக்கில் செலுத்த முடிவு..

0
161

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ஒரு கோடியே 13 லட்சம் குடும்பங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்திற்காக ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. ரேஷன் கடை பணியாளர்கள், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கும் நேரில் சென்று விண்ணப்பங்களை வழங்கி சிறப்பு பணி செய்தனர்.

இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை தொய்வின்றி செய்து உதவிய ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா வீதம் என கணக்கிட்டு ஊக்கத்தொகை வழங்கப்படும் என ரேஷன் கடை பணியாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக தொகை வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here