‘சிறுமியை தாக்கிய திமுக எம்.எல்.ஏ. குடும்பம்’ – பா.ரஞ்சித் கண்டனம்..!

0
98

சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் வீட்டில், வீட்டு வேலை செய்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிறுமியை கொடுமைப்படுத்திய எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு கட்சி தலைவர்கள், திரைத்துறையினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அந்த வகையில், சிறுமியை கொடுமைப்படுத்திய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இயக்குநர் பா.ரஞ்சித் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில். “பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது மகன் மறுமகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கொடும் சித்திரவதைக்குள்ளாகிய செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

இக்கொடூர செயலை புரிந்தவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி தமிழக அரசு கடூம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும் நிவாரணமும் தாமதமின்றி கிடைத்திட துணை நிற்ப்போம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் செர்லினா ஆகியோர் மீது நீலாங்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: ‘சலார்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here