‘பீகார் மாநில முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ்குமார்’ – பிரதமர் மோடி வாழ்த்து

0
116

பீகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் அரசியலில் பல திருப்பங்கள் ஏற்பட்டு பல்வேறு சர்ச்சைகள் நடந்து வருகிறது. மேலும், கடந்த சில தினங்களாக பீகார் அரசியல் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து ஆளுநரைச் சந்தித்த தான் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக கூறி தனது பதிவியை ராஜினாமா செய்வதாக கூறினார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாஜக ஆதரவுடன் இன்று பீகாரின் முதலமைச்சராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றார். அவர், 9ஆவது முறையாக முதலமைச்சர் பதவியை ஏற்றிருக்கிறார்.

இந்நிலையில், அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பீகாரில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கும் எந்த தடைகளையும் விட்டு வைக்காது.

முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ்குமாருக்கும், துணை முதலமைச்சராக பதவியேற்ற சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ஆகியோருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் தலைமையிலான அரசு முழு அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் என்று நான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டு தனது வாழ்த்துகளை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here