‘ராம் லல்லா’ ராமரின் சிலைக்கு பிரதிஷ்டை செய்த மோடி..!

0
88

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்று வருகிறது. ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. முன்னதாக ஜனவரி 16ஆம் தேதி பிரான் பிரதிஷ்தா பூஜை தொடங்கி, தொடர்ந்து 22ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த நிலையில் ராமர் கோவிலை பிரதமர் மோடி இன்று பூஜை செய்து திறந்து வைத்தார். பூஜை பொருட்கள், பட்டு வஸ்திரங்களுடன் கோவிலுக்குள் வந்த பிரதமர் மோதி, தற்போது அங்கு சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டுள்ளார்.

இந்த வழிபாட்டில் மோதிக்கு அருகே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அமர்ந்துள்ளார். மேலும், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் அமர்ந்துள்ளார்.

வழிபாட்டுக்குப் பின்னர் பால ராமர் சிலையின் கண்களில் மூடப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்வையொட்டி, கோவிலை சுற்றி ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோதி ‘ராம் லல்லா’ எனப்படும் குழந்தை ராமரின் சிலையை பிரதிஷ்டை செய்தார். இந்நிகழ்வுக்காக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நாட்டின் பல்வேறு மூலைகளிலிருந்தும் பல்வேறு துறை பிரபலங்கள் வந்துள்ளனர்.

ராமர் அவதரித்த அபிஜித் முகூர்த்த வேளையில், சூரியன் உச்சம் பெற்றிருக்கும் நேரத்தில் பிரதிஷ்டை நிகழ்வு நடத்தப்பட்டது. கோவிலில் வைக்கப்பட்டுள்ள ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோவில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு இன்று இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் மத சடங்குகள், யாகங்கள், ஹோமங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டது. அதன் படி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here