தனுஷ்கோடி யாக பூஜையில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி..!

0
101

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் நாளை (ஜன.22) நடக்க உள்ளது. இந்த கோவிலை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். இந்த நிலையில், இதற்காக விரதம் இருந்து வரும் பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களில் உள்ள புனித தலங்களில் தரிசனம் செய்து வருகிறார்.

அந்த வகையில், நேற்று (ஜன.,20) காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து ராமேஸ்வரம் சென்று 22 தீர்த்தங்களில் நீராடினார். பின்னர் ராமநாத சுவாமி கோவிலுக்குச் சென்று வழிப்பட்டார். இந்த நிலையில், இன்று தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் நடக்கும் யாக பூஜையில் பங்கேற்கும் மோடி சுவாமி தரிசனம் செய்ய இருக்கிறார்.

பிரதமர் மோடி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்துவிட்டு இரவு அங்குள்ள ராமகிருஷ்ண மடத்தில் தங்கினார்.

இந்த நிலையில், அங்கிருந்து இன்று காலை 9 மணிக்கு கார் மூலம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை செல்கிறார். அங்கு நடக்கும் யாக பூஜையில் பங்கேற்று தரிசிக்கிறார். பின் அங்கிருந்து காரில் புறப்பட்டு கோதண்டராமர் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்கிறார்.

இங்கு தான் ராமபிரான், ராவணன் தம்பி விபீஷணருக்கு புனித நீரை ஊற்றி பட்டாபிஷேகம் சூட்டியதால் இங்கிருந்தும் பிரதமர் புனித நீரை அயோத்திக்கு எடுத்துச் செல்ல இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here