‘மண்ணைவிட்டு மறைந்தாலும் எண்ணைவிட்டு மறையக்கூடாது’ – கையில் டாட்டூ போட்ட பிரேமலதா..!

0
90

Premalatha Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலக வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, தற்போது வரை அவரது நினைவிடத்திற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் தினமும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தேமுதிக தலைவரும் தனது கணவருமான விஜயகாந்த் மண்ணைவிட்டு மறைந்தாலும், அவரது நினைப்பு எண்ணைவிட்டு மறையக்கூடாது, அவரது பார்வையும் எப்போதும் மறையக்கூடாது என பிரேமலதா நினைத்துள்ளார்.

அதற்காக, தனது கணவர் விஜயகாந்த்தின் உருவபடத்தை தனது வலது கையில் பச்சைக் குத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், பிரேமலதா விஜயகாந்த் பச்சை குத்தியதில், சிரித்தப்படி விஜயகாந்த் இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here