‘இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை இதுதான் நம் கோவில்’ – தேமுதிக அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு..

0
112

சென்னை தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலக வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மறைந்த விஜயகாந்தின் திருவுருவப் படத்தை அவரின் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா நேற்று மாலை 4 மணிக்கு திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசியதாவது, ‘கேப்டனின் நினைவிடம் இந்த யுகம், இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை கோயிலாகத்தான் இருக்கும். பலரும், மறைந்த விஜயகாந்தின் பெயரில் டிரஸ்ட் ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டீர்கள்.

உங்களது விருப்பப்படி, டிரஸ்டை நான் அவர் மறைந்த அன்றே ஆரம்பித்துவிட்டேன். வள்ளல் விஜயகாந்த் மெமோரியல் அன்னதானம் ட்ரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்க வேலைகள் அன்றே ஆரம்பித்துவிட்டது

தொண்டர்களை வாழ வைத்து அழகு பார்க்கும் அன்னையாகத்தான் இனி என் வாழ்வு இருக்கும். இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை இதுதான் நம் கோவில். இன்று போடும் அன்னதானம் இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை தொடரும்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here