சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்தில் புனித ருத்ராட்ச மரக்கன்றுகளை நட்ட மோடி..

0
66

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் விழா வரும் ஜனவரி 22ஆம் தேதி மிக நடைபெற உள்ளது. இந்த கோவிலை பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். கோவில் திறப்பு விழா ஏற்பாடுகளை அம்மாநில அரசு தீவிரமாக செய்து வருகிறது.

இதன் காரணமாக பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு இந்தியா முழுவதும் உள்ள முக்கிய கோவில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.

அந்த வகையில் 3 நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி நேற்று சென்னையில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர் ஆளுநர் மாளிகையில் புறப்பட்டு நேற்று இரவு அங்கு தங்கினர்.

அப்போது, பிரதமர் மோடி கவிச்சக்கரவர்த்தி கம்பரின் ‘கம்பராமாயணம்’ ஐந்து தொகுப்புகளை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, ஸ்ரீ ராமரின் எழுச்சியூட்டும் கதையை அனைவரும் காண முடியும் என்றார்.

அதனைத் தொடர்ந்து, இன்று ஆளுநர் மாளிகை வளாகத்திற்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு புனித ருத்ராட்ச மரக்கன்றுகளை நட்டார். அப்போது பிரதமருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி இருந்தனர்.

இந்த நிகழ்வுக்குப் பின்னரே பிரதமர் மோடி இன்று காலை தனி விமானம் மூலம் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றார். ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு அங்கிருந்து ராமேஸ்வரம் சென்று சாமி தரிசனம் செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here